நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக மருத்துவமனைகளுக்கு வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு கோரியது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்து இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்க விரும்பவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் கடுமையாக தமிழக அரசு வாதம் செய்து வருகிறது. 2018ல் சம்பவம் நடந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இன்னமும் தொடர்வதால் திறக்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.