திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனால் நீடாமங்கலம் வட்டாரத்திலுள்ள ராயபுரம், வடுவூர் மற்றும் பேரையூர் ஆகிய பகுதிக்கு வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.