நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் கவேகம் எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் 12 மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டது.
ஆனாலும் கொரோனாவிற்கு மத்தயிலும் +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து நாளை முதல் பிளஸ் டூ மாணவர்களுக்கு விடுமுறை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னர் 12ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கும்போது 15 நாட்களுக்கு முன் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.