Categories
அழகுக்குறிப்பு சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முடி கருமையாக வளர உதவும் கறிவேப்பிலை ரசம்!!

தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாக  கறிவேப்பிலை ரசம் உதவுகிறது .இத்தகைய சக்தி வாய்ந்த கறிவேப்பிலை ரசம் செய்யலாம் வாங்க .

தேவையான  பொருட்கள் :

கறிவேப்பிலை – 1 கப்

துவரம்பருப்பு – 3 டீஸ்பூன்

புளி –  சிறிதளவு

மிளகு- 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

நெய் – சிறிதளவு

கடுகு-தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு.

கறிவேப்பிலை க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் கடுகு தாளித்து , அதில் புளித் தண்ணீர், மஞ்சள்தூள்,   உப்பு  மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன்  இறக்கினால் கறிவேப்பிலை ரசம் தயார் !!

Categories

Tech |