Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உங்க அம்மாவை வெட்டி கொள்ளுங்க” மனைவியின் பேச்சை கேட்டு மகன் செய்த கொடூரம்… திருச்சியில் பரபரப்பு…!!

வீட்டை எழுதி தராததால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் மகனும், மருமகளும் அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விசாலாட்சி என்ற மகளும், தர்மராஜ், ரகுநாத் என்ற மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சரஸ்வதி தனது சொத்தில் தலா இரண்டு மகன்களுக்கும் ஒரு வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு மற்றொரு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் அவரது மனைவி மாரியாயியுடன் இணைந்து சரஸ்வதி வீட்டிற்கு சென்று அவர் குடியிருக்கும் வீட்டையும் தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி தொந்தரவு செய்துள்ளார்.

அதற்கு சரஸ்வதி தான் இரண்டு மகன்களுக்கும் ஏற்கனவே ஒரு வீட்டை எழுதி கொடுத்து விட்டதாகவும், தான் இறந்த பிறகு இந்த வீட்டை பங்கு வைத்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய போது மாரியாயி உங்களது தாய் உயிருடன் இருக்கும் வரை நமக்கு வீடு தர மாட்டார் என்று கூறியதோடு, அவரை வெட்டிக் கொள்ளுங்கள் என்று தர்மராஜை தூண்டி விட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் சரஸ்வதியை சரமாரியாக வெட்டி விட்டு தனது மனைவியுடன் தப்பி ஓடி விட்டார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சரஸ்வதியை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த கல்லகுடி காவல்துறையினர் விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |