Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை…. திருமணம் நடத்த தடை….. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை திருமணம் நடத்த அனுமதி இல்லை என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. திருமணங்கள் நடத்த முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும். கொரோனா காரணமாக தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே இனிமேல் கோயிலில் அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |