Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிசிடிவி காட்டி கொடுத்ததால் காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட திருடர்கள் ..!!

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகையை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்

சென்னை அமைந்தகரை கரன்ட்ரைட் காலணியைச் சேர்ந்த உஷா என்பவர் நேற்று இரவு கடைக்குச் சென்று வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உஷாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துதனர் . உடனே உஷா சத்தம் போட ஆரம்பித்தார் . இதனால் கொள்ளைக்காரர்கள் உஷாவை தள்ளிவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றனர் .

 

 

பின்னர், இது குறித்து அமைந்தகரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் விசாரணை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். இந்நிலையில் அமைந்தகரை சார்ந்த அஜித் அப்துல் ரஹீம் ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நகையையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |