Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்…. எலும்புக்கூடாக மீட்கப்பட மனித உடல்….. தீவிர விசாரணையில் போலீசார்….!!

சேலம் மாவட்டத்தில் குமரிசகரடு தடுப்பணையில் மனித எலும்புக்கூட்டை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியிலிருக்கும் குமரிசகரடு இடத்தில் தடுப்பணை அமைந்துள்ளது. அந்த தடுப்பணை ஏற்காடு மலைப்பகுதியிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயிலின் காரணமாக தடுப்பணையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பணைக்கு சென்ற பொது மக்கள் தடுப்பணை சேற்றில் மனித எலும்புக்கூடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |