Categories
தேசிய செய்திகள்

BREAKING: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 3.50 இலட்சத்தை எட்டியுள்ளது. எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அவ்வாறு மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையில் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.26ஆயிரம் கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன் மூலமாக 80 கோடி பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |