இந்திய உணவில் அதிக பங்கு வகிக்கும் ஓன்று சீரகம் . வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது என ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் அதிக அளவு நாம் சீரகத்தை பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இதைப் பார்ப்போம்.
நம் வீட்டின் சமையலறையில் பருப்புயும், சீரகத்தையும் அதிக அளவில் வைத்திருப்போம். ஏனெனில் சீரகம் இல்லாமல் நாம் எந்த உணவையும் சமைப்பது இல்லை. சீரக செடியில் இருந்து சீரகம் கிடைக்கிறது. சீரகம் நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளித்து வந்தாலும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
நெஞ்செரிச்சல்
சீரக விதைகள் வாய்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க உதவுகிறது. அதேசமயம் நெஞ்செரிச்சலுக்கு காரணமாகவும் அமைகின்றது.
ஏப்பம்
சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ் விளைவு, ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன. இதனால் உடலின் குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் அதிக அதிகமான வாயு மற்றும் வீக்கம் வாய் வழியாக வெளியேறும்.
கல்லீரலில் பாதிப்பு
சீரகம் அதிக அளவில் எடுத்துக் கொண்டு வருவதால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. பெண்கள் கர்ப்பகாலத்தில் சீரகத்தை பயன்படுத்த கூடாது. இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த அளவு சீரகத்தை எடுத்துக் கொண்டால் நல்லது.
மாதவிடாயில் அதிக வலி:
மாதவிடாய் காலத்திலும் சீரகத்தை உண்ணும் போது அதிக உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த நேரத்தில் சீரகத்தை தினமும் உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தம் குறைவு
சீரகத்தில் அதிக அளவில் நம் உணவில் எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் குறைவு ஏற்படுகிறது. வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டால் உடலில் ரத்தம் சீராக இருப்பது மிகவும் அவசியம். எனவே சீரகத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சீரகத்தை உங்கள் உணவில் இருந்து குறைத்துக்கொள்ள வேண்டும். அது பால் சுரப்பை பெருமளவில் குறைக்கும். அதற்காக தங்கள் உணவில் சீரகத்தை முற்றிலும் தவிர்த்து விட வேண்டாம் .
சீரகம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எந்த உணவாக இருந்தாலும் குறைவாக எடுத்துக்கொள்வது நமது நீண்ட வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும்.