சேலம் மாவட்டத்தில் நகராட்சி அலுவலர் கடை வீதிகளுக்கு சென்று கொரோனா தொற்று விதிமுறையை கடை பிடிக்காதவர்களிடத்தில் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்றை தடுக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆத்தூர் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் துப்புரவு அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் ஒன்று சேர்ந்து நகராட்சி கடைகளில் ஆய்வு செய்த போது சமூக இடைவெளி பின்பற்றாத 13 பேரிடம் மொத்தம் 6 ஆயிரத்து 500 அபராதமும் மேலும் முககவசம் அணியாத 12 பேரிடம் 2 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து நரசிங்கபுரம் பகுதியில் 43 பேரிடம் 8 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.