இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 3.50 இலட்சத்தை எட்டியுள்ளது. எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் என்ற மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த மருந்தை மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு சுவாச மண்டல பாதிப்பை குறைக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தற்போது புதிதாக இந்த மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.