சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 499 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 499 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 160 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.