Categories
உலக செய்திகள்

எவரெஸ்டில் ஏறலாம்னு நினைச்சேன்… அதுக்குள்ள இப்படி ஆகிருச்சு… அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை…!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிக்கொண்டிருந்த ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். இது நேபாளத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அந்த மலை சிகரத்தின் உச்சியை அடைய உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் மலை ஏறுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின் மலை ஏறுவதற்கு சுமார் 377 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டு வீரரான Erlend Ness என்ற நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக எவரெஸ்ட் பேஸ் கேம்பில்  தங்கவைக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் Erlend Ness குழுவில் உள்ள ஒரு பெண்ணுக்கும் கொரோனா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மலை ஏறுவதற்கு ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |