நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மும்பையில் நேற்று நடந்தத போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆர்சிபி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக விராட் கோலி -தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர் . இருவரின் பாட்னர்ஷிர்ப் சிறப்பாக அமைந்ததால், ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு களை நாலாபுறமும் அடித்து விளாசினார். இதனால் ஆர்சிபி விக்கெட்டுகள் ஏதுமின்றி 16.3 ஓவர்களிலேயே 181 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
குறிப்பாக நேற்றைய போட்டியில் படிக்கல் முதல்முறையாக சதம் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி வெற்றி குறித்து ,கேப்டன் விராட் கோலி கூறும்போது, 20 ஓவர் கிரிக்கெட்டின் போது பேட்டியின் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைவது அவசியமாகும். இதனால் ஒருவர் நன்றாக விளையாடும் போது ,மற்றவர் அவருக்கு வாய்ப்பு தருவது முக்கியமாகும். எங்களுடைய ஆட்டமும் அப்படித்தான் இருந்தது. குறிப்பாக நானும் ,படிக்கலும் சதம் அடிப்பதை பற்றி பேசியபோது , நீங்கள் ஆட்டத்தை ,முடித்து விடுங்கள் என்றார். அவரிடம் நான் சதம் அடிக்க வேண்டும் என்று கூறினேன். இதனால் போட்டியில் படிக்கல் ,சதம் அடித்து அசத்தினார். எனவே படிக்கல் சதம் அடிப்பதற்கு தகுதியானவர் ,என்று கேப்டன் கோலி படிக்கலுக்கு ,பாராட்டு தெரிவித்துள்ளார்.