குக் வித் கோமாளி அஸ்வினின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அஸ்வின் . இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வினுக்கு தற்போது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில சீரியல்களிலும், குறும் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஸ்வினின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தாடி, மீசை இன்றி கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் அஸ்வின் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .