Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்க உழைப்புக்கு ஊதியம் தாங்க… பீடித் தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டம்… நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…!!

பீடி சங்க தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள வள்ளியம்மாள்புரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பீடி கம்பெனி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பீடி கம்பெனியில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல வடிவு என்பவரின் தலைமையில் பீடி சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து கூட்டத்தில் பீடி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் மகாவிஷ்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், சங்க நிர்வாகிகள் ஆறுமுகராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் என ஏராளமானோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் வள்ளியம்மாள்புரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பீடி கம்பெனி கிளையை வடமலைபட்டி பகுதிக்கு மாற்றுவதற்கு தொழிலாளர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் பீடி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் இணைந்து மீண்டும் வள்ளியம்மாள்புரத்தில் பீடி கம்பெனி கடையைத் திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்தனர்.

இதனையடுத்து ஏப்ரல் மாதம் முதல் பீடித் தொழிலாளர்களுக்கு 1,000 பீடிக்கு ரூ.9.39 உயர்த்தி மொத்தம் ரூ.227.24 பைசா தமிழக அரசின் அரசாணைப்படி தொழிலாளர் துறை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.இதனையடுத்து 1,000 பீடி சுற்றுவதற்கு தேவையான தரமான இலை 700 கிராம் வழங்கிட வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த பீடி சங்க அமைப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த பீடி கம்பெனி கிளையில் புதிய தலைவராக தமிழரசி, துணைத் தலைவராக காசியம்மாள், செயலாளராக அன்னலட்சுமி, துணை செயலாளராக ஜெயலட்சுமி மற்றும் பொருளாளராக அருணாச்சலவடிவு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |