Categories
Uncategorized மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகள் தொடர்ந்து பலி…. சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நடந்த சோகம்….!!

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் அருகே வசாயி கொரோனா சிகிச்சை மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அங்கிருந்து நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |