Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு…. டிக்கெட் முன்பதிவு மையம் இயங்காது…. திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 3.50 இலட்சத்தை எட்டியுள்ளது. எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கி போது ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யலாம். வழக்கமாக பயணம் மேற்கொள்ள டிக்கெட் எடுப்பதற்கான மையங்கள் செயல்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |