சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி வந்த கண்டக்டருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மேலும் வாகனங்களில் குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் செல்லக் கூடாது போன்ற விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாநகர அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது தனியார் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி வந்த கண்டக்டருக்கு ரூபாய் 5 ஆயிரமும், பேருந்தில் முக கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளிடம் ரூபாய் 200 அபராதமும் வசூலித்துள்ளனர்.