Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளிலும் கெத்து காட்டிய ‘விராட் கோலி’…! புதிய சாதனை படைத்து அசத்தல் …!!!

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் , புதிய சாதனை படைத்து விராட் கோலி அசத்தியுள்ளார்.

நேற்று மும்பையில் நடைபெற்ற 16 வது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் படிகள் விராட் கோலி பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. படிக்கல் 101 ரன்களை எடுத்து தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். விராட் கோலி 72 ரன்களை குவித்தார்.

நேற்றைய போட்டியின் மூலம் , இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அதிக ரன்களை குவித்த பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் விராட் கோலி மொத்தமாக 6021 ரன்களை குவித்து முதலிடத்தை பெற்றுள்ளார். இதற்கு அடுத்ததாக 2வது இடத்தில் ,சுரேஷ் ரெய்னா 5,448 ரன்கள்,3 வது இடத்தில் ஷிகர் தவான் 5428 ரன்கள் ,4 வது இடத்தில்  டேவிட் வார்னர் 5,384 ரன்கள்  மற்றும் 5 வது இடத்தில் ரோகித் சர்மா 5,368 ரன்கள் ஆகிய வீரர்கள் ,அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன .

Categories

Tech |