Categories
தேசிய செய்திகள்

நான் செத்தாலும் ஆவியாக வந்து மோடிக்கு வாக்களிப்பேன்…. கடும் விமர்சனம்….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியுமான யஸ்வந்த் சின்ஹா பிரதமர் மோடியை விமர்சனம் செய்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது ட்விட்டர் பக்கத்தில், “நான் கொரோனாவால் செத்தாலும் ஆவியாக வந்து பிரதமர் மோடிக்கு வாக்களிப்பேன். நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |