சேலம் மாவட்டத்தில் சம்பந்தி வீட்டார் திட்டியதால் மன உடைந்த கணவர் – மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் தங்கமணி, ரத்தினம் என்ற தம்பதிகள் வசித்து வந்தார்கள். இத்தம்பதிகளுக்கு ராஜா அண்ணாமலை என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜா அண்ணாமலை சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம செய்ய பெற்றோர்கள் நிச்சயம் செய்துள்ளனர்.
இதனையடுத்து ராஜா அண்ணாமலை அவருக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் ராஜா அண்ணாமலை வீட்டிற்கு சென்று உன் மகனை கண்டித்து வை இல்லையென்றால் திருமணம் நடைபெறாது என பெற்றோரிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கமணி மற்றும் ரத்தினம் இருவரும் வீட்டிலுள்ள தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.