Categories
உலக செய்திகள்

லாரிகளுக்கு இடையே சிக்கிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. சோகத்தில் பிரேசில்….!!

இரண்டு லாரிகளுக்கு இடையே ஒரு கார் சிக்கி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரேசிலில் Santa Maria do Para என்ற இடத்தில் சாலையில் இரண்டு லாரிகளுக்கு இடையே ஒரு கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காருக்குள் இருந்த 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று இன்னும் தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை கைப்பற்றி அவர்களின் சொந்த ஊரான பிரான்ஸ்கோவிற்கு அனுப்பி வ் அளித்துள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்களில் 2 பேர் கணவன் மனைவி என்பதும் மற்ற இரண்டு பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகள் என்பதும் மேலும் ஒருவர் அவர்களுடைய மருமகள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |