சேலம் மாவட்டத்தில் நர்ஸ் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பனிக்காரன் கொட்டாய் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மகள் இருந்தார். இவர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலைக்கு செல்ல விரும்பாத பவித்ரா வழக்கம்போல் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மதியம் சாப்பிடுவதற்காக அறைக்கு சென்ற போது விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் உடன் பணியாற்றும் நர்சுகள் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அறை பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது பவித்ரா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.