சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகமாக இருந்தும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 1, 200 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1,350 கன அடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு 1000 அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 800 அடி குறைக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தும் அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 97.55 அடியாக உயர்ந்துள்ளது.