கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நாயக்கம்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் முதியவர் ராக்கம்மாள்(80). இவருடைய கணவர் இறந்த நிலையில் தன்னுடைய மகள்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய இறுதி காலத்தில் தன்னுடைய மகள்கள் தன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பி இருந்திருக்கிறார். ஆனால் அதற்கு மாற்றாக அவருடைய பிள்ளைகள் கவனிக்கவில்லை.
இதையடுத்து ராக்கம்மாள் தனக்கு சொந்தமான உடைந்த வீட்டில் கூலி வேலைக்கு போய் கிடைக்கும் சம்பளத்தில் காலத்தை கழித்து வந்துள்ளார். இதையடுத்து தன்னுடைய இதர செலவுகளுக்கும் அரசு தரும் ஓ.ஏ.பி உதவித்தொகைக்கு பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டரான அன்பழகன் என்பவர் இந்த பாட்டியின் நிலைமையை அறிந்துள்ளார்.
இதையடுத்து அந்த மாவட்ட ஆட்சியர் தன்னுடைய மனைவியிடம் நாட்டுக்கோழி குழம்பு, வடை பாயசத்துடன் கூடிய சைவ சாப்பாடு ரெடி செய்து அதோடு 2 புடவையையும் எடுத்து கொண்டு அந்த பாட்டியின் வீட்டுக்கு சென்று சாப்பிட சொல்லியுள்ளார். ஆனால் அந்த பாட்டி யார் என்று தெரியாததால் சாப்பிட மறுத்துள்ளார். இதையடுத்து அந்த கலெக்டர் நான் உனக்கு தூரத்து சொந்தம் பாட்டி ,உனக்காக இதையெல்லாம் நான் செய்து கொண்டு வந்திருக்கிறேன். வயிறார சாப்பிட்டு என்று சொல்லியிருக்கிறார். இதன் பின்னர் தான் சாப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் பாட்டிக்கு ஒரே வாரத்தில் ஓ.ஏ.பி உதவித்தொகை கிடைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியபோது தான் பாட்டிக்கு வந்தது கலக்டெர் என்று. இதையடுத்து பாட்டி ஆனந்த கண்ணீருடன், என் பிள்ளைகள் கூட விட்டுட்டு போய்ட்டாங்க ஆனா ஒரு கலெக்டர் நீங்க வந்து எனக்கு உதவி பண்ணுறீங்கன்னு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் ஊரில் யார் கேட்டாலும் அன்பழகன் என்னுடைய மகன் என்று சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளத.
பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் தங்களுடைய வயதான காலம் வரையிலும் ஓடி உழைத்து களைத்து விடுகிறார்கள். ஆனால் கடைசியில் தங்களுடைய பிள்ளைகள் தங்களை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் இப்படி தங்களுடைய பெற்றோர்களை கவனிப்பதில்லை. எனவே இந்த சம்பவத்தின் மூலமாக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுடைய தாயும் தந்தையும் எந்த காரணம் கொண்டும் தனித்து விடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.