லண்டனில் மேயர் வேட்பாளரான ஒருவர் தன் சிறுநீரை குடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் வரும் மே 6ஆம் தேதியன்று மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் முன்னாள் வங்கி ஊழியரான Brian Rose போட்டியிடயிருக்கிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கடந்த 2018 ஆம் வருடம் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதன் பின்பு அதனை அவர் நீக்கியுள்ளார். எனினும் தற்போது தேர்தல் சமயத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரியன் ரோஸ் தன் சிறுநீரை இருமுறை பருகுகிறார். ஓட்ட பந்தய வீரரான Timothy Sheiff என்பவர் அவருடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனைக்குடித்த பிறகு அவர், இது மோசமானதாக இல்லை. சிறிது உப்பு தான் உள்ளது என்பது போன்று கூறுகிறார். அவர் ஏன் இவ்வாறு செய்கிறார்? என்பது தொடர்பான விளக்கம் தெரியவில்லை.