நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக போனில் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருடன் பணியாற்றியவர்கள் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி கொட்டாச்சியும் விவேக் தனக்கு கடைசியாக செய்த போன் காலை உருக்கத்துடன் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “இது எல்லாருக்கும் வரும் கஷ்டம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லெவல்ல கஷ்டம் இருக்கு. உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இயற்கை நம் மேல் கருணை வைத்து சீக்கிரமாக இந்த நிலை சரியாகி மீண்டும் நமக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து எல்லோரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆறு மாத காலம் மனதுக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தியது.
எப்படி என்றால் பழைய நண்பர்களை எல்லாம் மீண்டும் அழைத்து நம்மோடு சேர்த்து வைத்து வேலை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் ஏற்பட்டுள்ளது. அதற்கு உன்னுடைய குறும்படம் எனக்கு தூண்டுதலாக இருந்துள்ளது. அதை நான் நிச்சயம் செய்வேன் உன்னோடு குடும்பத்துக்கும் உனக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று அவர் கூறியுள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.