திருநெல்வேலியில் மின்வாரிய ஊழியர் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கணேசன் திடீரென வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.