Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை மதிக்கவே இல்ல..! அதிரடி நடவடிக்கையால் சிக்கியவர்கள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்களிடமிருந்து இதுவரை 37 1/2 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கொரோனா தொற்று வேகமாக பரவுவதை கருத்தில்கொண்டு சுகாதாரத் துறையினர் மூலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் நலன் கருதி சமூக இடைவெளி, முககவசம் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவ தொடங்கிய 2020-ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காமல் சென்றவர்களுக்கு காவல் துறையினர் மூலம் ரூ. 28 லட்சத்து 20 ஆயிரமும், சுகாதாரத் துறையினர் மூலம் ரூ. 4 லட்சத்து 27 ஆயிரமும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ. 14,100-ம், வருவாய் துறையினர் மூலம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 200-ம், நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 600-ம், பேரூராட்சி நிர்வாகம் மூலம் ரூ.45 ஆயிரத்து 200-ம் அபராதமாக பொது மக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Categories

Tech |