அருப்புக்கோட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பெண்ணை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி கட்டக்கஞ்சம் பட்டியில் ஈஸ்வரி என்ற பெண் குடும்பத்தோடு வசித்து வந்தார் . இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவர்க்கு இடையே நெருக்கமாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்காள ஈஸ்வரி அடைக்கலத்திடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது.
இந்நிலையில் அடைக்கலம் வீட்டிற்குச் சென்று அங்காள ஈஸ்வரி மேலும் பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அங்காள ஈஸ்வரி கடுமையாக தாக்கப்பட்டு தலையணையால் முகத்தை அழுத்தி அடைக்கலம் கொலை செய்து, உடலை ஈஸ்வரியின் வீட்டில் போட்டுச் சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அடைக்கலத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.