Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாளாகவே இது வருது…. ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. நெல்லையில் பயணிகள் அவதி….!!

நெல்லையில் பெய்த கன மழையினால் தற்காலிக பேருந்து நிலையம் முழுவதும் சேறாக மாறியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது “ஸ்மார்ட் சிட்டி” என்ற திட்டத்தின் அடிப்படையில் பலவிதமான பணிகள் நடக்கிறது. இதில் ஒரு பங்காக வேய்ந்தான் குளத்திலிருக்கும் புதிய பேருந்து நிலையத்திலும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக 2 பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த சில வாரங்களாகவே நெல்லையில் மாலை வேளையில் மழை பொழிவு ஏற்படுகிறது. அதேபோல் கடந்த 21ஆம் தேதியும் கனத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் தற்காலிக பேருந்து நிலையத்திலிருக்கும் பள்ளங்களில் நீர் தேங்கியதால் அப்பகுதி முழுவதும் சேறாக காட்சியளித்துள்ளது. இதனால் பேருந்தில் ஏற செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.

Categories

Tech |