பிரிட்டனிலுள்ள ஸ்டோக் ராயல் ஹோட்டலை முகேஷ் அம்பானி 57 மில்லியன் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.
உலக டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி பிரிட்டனில் உள்ள ஸ்டாக் பார்க் ராயல் ஹோட்டலை 57 மில்லியன் கொடுத்து வாங்கியுள்ளார். பிரிட்டன் ஸ்டோக் பார்க் ராயல் ஹோட்டல் 300 ஏக்கர் நிலப்பரப்பில் 49 படுக்கை அறைகளைக் கொண்டதாகும். அதன் தோட்டத்தில் 13 டென்னிஸ் ஆடுகளங்கள் கோல்ப் திடல் ஆகியவை உள்ளன. மேலும் 14 ஏக்கரில் பல தாவரங்களுடன் பூங்கா ஒன்று உள்ளது.
ஸ்டாக் பார்க் ராயல் ஹோட்டல் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் 1908ஆம் ஆண்டு வரை இதில் ஒரு குடும்பம் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.ஸ்டாக் பார்க் ராயல் ஹோட்டலில் பல திரைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.