Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது வேகமாக பரவுது…. தலைமை வகித்த பொதுச் செயலாளர்…. தேனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி….!!

தேனியில் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு கலை நிகழ்ச்சிகளின் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் காவல்துறையினரும், நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் கல்லூரியும், தொழில்நுட்ப கல்லூரியும் சேர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தியது.

இதனை மேலப்பேட்டையை சேர்ந்த இந்து நாடார்களின் பொதுச்செயலாளரான ராஜமோகன் தலைமை தங்கியுள்ளார். மேலும் இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கோடாங்கி கலைக்குழுவினர்கள் கிராமிய பாடலை பாடியும், மேளதாளம் இசைத்தும், வேடமிட்டு நாடகம் செய்து காண்பித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Categories

Tech |