நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தினுடைய தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்றைய தினம் ( நேற்று ) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கையில் பொதுவாகவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் கவுண்டிங்டே…..
அதாவது வாக்குகள் எண்ணுகின்ற நாள் மே இரண்டாம் தேதி, அந்த நாளில் மட்டும் தான் தபால் வாக்குகள் குறிப்பாக எண்ணபட வேண்டும். எனவே அதற்கு முன்னதாக எந்த ஒரு சூழ்நிலையிலும் தபால் வாக்குகள் எண்ணக்கூடாது. தபால் வாக்குகளை எக்காரணத்தைக் கொண்டும் 1ஆம் தேதி அதை திறக்க கூடாது. அது வந்து வாக்கு எண்ணிக்கை நாளாக இருக்கின்ற இரண்டாம் தேதி தான் திறக்கப்பட வேண்டும்.
எனவே அந்த வகையில் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்குகள் எப்படி கடந்த காலங்களில் வழிமுறைகளை எல்லாம் கையாள பட்டதோ, அதே வழிமுறைகள்தான் கையாளப்பட வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் 1ஆம் தேதியன்று வாக்குகளை முன்கூட்டியே அறையை திறந்து….
வாக்குகளை எல்லாம் கட்டுக்கட்டாக பிரித்து, அதன் அடிப்படையில் வைக்கக்கூடாது. எனென்று சொன்னால் சில மாவட்டங்களில் இருந்து எங்களுடைய வேட்பாளர்கள், எங்களுடைய தலைமை ஏஜென்ட் எங்களுடைய கவனத்திற்கு…. கட்சியினுடைய கவனத்திற்கு கொண்டு வந்த காரணத்தினால், உடனடியாக தலைமை தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து வந்து கோரிக்கை அளிக்கப்பட்டு அந்த அடிப்படையில் எல்லா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சட்டப்படி, விதிப்படி மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் என்ன சொல்கிறதோ, அந்த வழிமுறை முழுமையான அளவிற்கு பின்பற்ற வேண்டும். அது கிஞ்சித்தும் எந்த அளவிற்கும் ஒரு மாறுதல் கூட இருக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.