Categories
அரசியல் தேசிய செய்திகள்

இது தான் ”எங்களுக்கும்”…. ”அவுங்களுக்கு” உள்ள வித்தியாசம் – கடிதத்தை சுட்டிக்காட்டி பாஜகவுக்கு பதிலடி ..!!

இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி,  சென்ற பொதுமுடக்கத்தை நான் பார்த்தேன். எனக்கு தெரியும் கிராமத்தில் எப்படி பட்டினிச்சாவு நிகழ்ந்தது என்று எனக்கு தெரியும். ரேஷன் கடை அரிசி இரண்டு நாட்கள் சாப்பிடலாம் அல்லது நான்கு நாள் சாப்பிடலாம் அல்லது பத்து நாள் சாப்பிடலாம். அதற்கு பிறகு சாப்பிட முடியாது பல பிரச்சினைகள் இருக்கிறது. மக்கள் வந்து குழந்தை சோற்றுக்காக எவ்வளவு ஏங்கினார்கள் என்று கிராமத்தில் தெரியும். கிராமங்களின் நிலை மிக மோசமாக மாறிவிடும். எனவே பொது முடக்கம் என்பது தீர்வாகாது.

தமிழ் சமூகம் ஒரு கட்டுப்பாடான சமூகம் என்பதை இதில் நாம் காட்ட வேண்டும். உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டம் எவ்வளவு ஒழுக்கமாக  நடந்தது ? யார் அதை கட்டுப்படுத்தினர் ? நான்  ஜல்லிக்கட்டு போராட்டத்தை பார்த்தேன், வன்முறை இல்லை, பெண்களை சீண்டும் விஷயம் அல்ல, அசிங்கமான உரையாடல்கள் இல்லை, எல்லாருமே  நேர்மையாக இருந்தார்கள். மகாத்மா காந்தியும் –  விவேகானந்தரும் போராட்டம் நடத்துவது போல் இருந்தது. அந்த அளவிற்கு அங்கு ஆன்மிகம் இருந்தது. எனவே நாம் கொரோனாவுக்கு எதிராக கட்டுப்பாடோடு வாழ முடியும். தமிழகத்தில் நாம் முயற்சி செய்து பார்ப்போம்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் ஆறு ஆலோசனைகள் வழங்கி உள்ளார், ஆனால் அதற்கு பதில் கடிதமாக சுகாதாரத்துற அமைச்சர் காங்கிரஸ் தலைவர்களோடு விமர்சனம் செய்து ஒரு கடிதம் திருப்பி அனுப்பி இருக்கிறார், இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, முதல் கடிதம் தான் மன்மோகன்சிங் யார் என்பதை காட்டும். அதற்கு பதில் கடிதம் பாரதிய ஜனதா எப்படி என்பதை காட்டும். எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கின்ற வித்தியாசம் இந்த கடிதத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என அழகிரி தெரிவித்தார்.

Categories

Tech |