2நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரியிடம், வட மாநிலங்களில் மட்டுமே ஆக்சிஜன் பற்றாக்குறையால் இழப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அதிகரித்து இருக்கிறது, இந்த மாதிரி நிகழ்வு தமிழகத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு,
வேலூரில் இதே மாதிரி நிகழ்ந்திருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் இவர்களுக்கு முன்னெச்சரிக்கை இல்லாததுதான் காரணம்.கொரோனா அலைப்பற்றி அரசின் நிர்வாகம் யோசிக்கும் சமயத்தில் தேர்தல் வந்துவிட்டது. எனவே அரசு நிர்வாகம் தேர்தலில் தான் கவனம் செலுத்தியதே தவிர இரண்டாவது அலை பற்றி கவனம் செலுத்தவில்லை. வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கும் அதுதான் ஒரு காரணம்.
இன்னொரு காரணம் முதல் அலை வந்த போது தமிழக அரசும், இந்திய அரசும் சில அறிவிப்புகள் வெளியிட்டார்கள். மருத்துவ உபகரணங்கள் செய்ய…. ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய…. யாரெல்லாம் தொழில் துவங்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ லைசென்ஸ் தேவையில்லை, அனுமதி தேவையில்லை, அவர்கள் தொழில் தொடங்கலாம் தொழில் தொடங்கிய பின் அதை எல்லாம் செய்யலாம் என்று சொன்னார்கள். ஆனால் நடைமுறையில் அதை போல் வரவில்லை.
ஆனால் அதேபோல முயற்சி செய்தவர்கள் எல்லோருக்குமே வங்கியில் சென்று பணம் கேட்டால், கவர்மெண்ட் ஆர்டர் எங்கு இருக்கிறது என்று கேட்கிறார்கள். இல்லை கவர்மெண்ட் இதே மாதிரி சொல்லி இருக்கிறது என்று சொன்னால் எங்களுக்கு சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். எனவே அறிவிப்பு நல்ல அறிவிப்பு.
ஆனால் அந்த அறிவிப்பில் இருக்கின்ற சிரமங்களை மாநில அரசும், மத்திய அரசும் பின்தொடர்ந்து சென்று அவர்களை நிறுத்தி செய்திருந்தால், ஏராளமான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்திருகலாம், ஏராளமான மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்திருக்கலாம். எல்லோருமே ஆரம்பித்தார்கள் ஆனால் வங்கிகள் உதவவில்லை. ஏனென்றால் வங்கிகளுக்கு அதற்கான உத்தரவு போகவில்லை என தெரிவித்தார்.