மராட்டிய மாநிலத்தில் சிறப்பு கொரோனா மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டே வருகிறது .கடந்த சில நாட்களில் மட்டும் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால் சிறப்பு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக வருகிறது.
அந்த வகையில் பல்கார் மாவட்டம் வாசை என்ற பகுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது. அந்த கொரோனா மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த எதிர்பாராத தீ விபத்தினால் அந்த கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் வாசை விரார் நகராட்சி ஆணையம் மூலம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.