ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை தடை செய்யக்கூடாது என பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
கொரோனா பாதிப்பு அதிகமாவதை குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்.பிரதமர் மோடி அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும். மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்குகின்றது. கொரோனா நோய் பரவல் உள்ள மாநிலங்களின் நிலைமையை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவைகளை நிறைவு படுத்துவதில் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நாட்டினரும் ஒரே நாட்டினர் என்ற நோக்கத்தில் இணைந்து பணியாற்றினார் வளங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் விரைவாக சென்றடைய எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தில் ரயில்வே மற்றும் விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள், பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை முற்றிலும் தடை செய்யக்கூடாது. மத்திய அரசிடமிருந்து ஆக்ஸிஜனின் ஒதுக்கீடு அளவினை பதிவு செய்யப்பட்டவுடன், மாநிலத்தின் பல்வேறு கிளை மருத்துவமனைகளில் உடனடியாக ஆக்சிஜன் வழங்குவதை ஒருங்கிணைப்புக்குழு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.