கர்நாடகாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
கர்நாடகா வருவாய் துறை மந்திரி ஆர்.அசோக் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு வழிகளில் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் கொரோனா பரவலை தடுப்பதற்காக மக்களிடையே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக பெங்களூர் மாநகராட்சிக்கு ரூ.350 கோடி நிதியும் பிற மாவட்டங்களுக்கு ரூ.266 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என்றும் அதே நேரத்தில் மக்களின் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் சரியான முறையில் இயங்குவதாகவும் கூறியுள்ளார்.
.