நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. . இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 25 ஞாயிறு முழு ஊரடங்கு அன்று சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல்- கோயம்பேடு விமான நிலைய வழித்தடத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில், சென்ட்ரல்-பரங்கிமலை வழித்தடத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில், விம்கோ நகர் – விமான நிலையம் வழித்தடத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.