Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இரவுநேர ஊரடங்கு… பிச்சை எடுத்துப் போராட்டம்…. பரிதவிக்கும் கலைஞர்கள் ..!!

இரவு நேர ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தஞ்சையில் மேடை நடனக்கலைஞர்கள் உண்டியல் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு திரண்டு முக கவசம் , கையுறை அணிந்து போராட்டம் செய்த மேடை நடனக்கலைஞர்கள் மற்றும் ஒலி – ஒளி அமைப்பினர்,  இரவு நேர ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினர். இரவு பத்து மணிக்கு மேல் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி 50% சதவிகித மக்கள் பங்கு பெரும் அளவிற்கு கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேர்தல் பரப்புரையின் போது கூட்டத்தை சேர்ப்பதற்காக ஒரு சில அரசியல் கட்சிகள் தங்களை பயன்படுத்திக்கொண்டு, கொரோனா ஊரடங்கில் தங்களை அக்கட்சிகள் கண்டுகொள்ளவில்லை என்று மேடை நடனக்கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு கூட தங்கள் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

Categories

Tech |