நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் 12 மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . வழக்கமாக அரசு பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மாணவர்கள் இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை வருவது வேதனையாக இருக்கிறது. எனவே உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று கடைசி வேலை நாளாக அறிவித்து கோடை விடுமுறை விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.