Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அமலுக்கு வந்த கட்டுபாடுகள்… இதை மீறி வெளியே வராதீங்க… போலீஸ் எச்சரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக வாகனங்கள் மற்றும் கடைவீதிகள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருப்பதால் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகியவை இரவு 9 மணிக்கு முன்னதாகவே மூடப்பட்டது. இதன் காரணமாக கடைவீதிகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் இரவில் 10 மணிக்கு மேலும் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் சில கடைகள் மூடப்படாமல் இருந்தன.

மேலும் இரவு நேர ஊரடங்கில் வாடகை கார், அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லாததால் வாகன போக்குவரத்து இல்லாமல் பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 9.30 மணிக்கு மேல் பேருந்து நிலையங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் ஊராடங்கை மீறி வெளியில் நடமாடுபவர்களை காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

Categories

Tech |