கே. எல். ராகுல் – கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் ,9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி ,பஞ்சாப் வெற்றி பெற்றது .
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 17 வது லீக் போட்டியில் ,பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின . இந்த போட்டி சென்னை எம். எ சிதம்பரம் மைதானத்தில், நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங்க்கை தேர்வு செய்ததால் , மும்பை முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது . தொடக்க வீரர்களாக டி காக்-ரோஹித் சர்மா களமிறங்கினர் இதில் டி காக் 3 ரன்களை எடுத்து வெளியேறினார் .அதன் பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார் .
கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி காட்டினார் .அவர் 52 பந்துகளில் 5 பவுண்டரி , 2 சிக்சர்களை அடித்து 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் . அடுத்ததாக களமிறங்கிய ஹார்திக் பாண்டிய 1 ரன் மற்றும் குர்னால் பாண்டிய 3 ரன் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் . இறுதி வரை அட்டமிழக்காமல், பொல்லார்ட் 12 பந்துகளில் ,16 ரன்களை குவித்தார் .இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை குவித்துள்ளது .132 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் களமிறங்கியது .
தொடக்க வீரர்களாக கே. எல். ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கியது. இதில் மயங்க் அகர்வால் 25 ரன்களில் ஆட்டமிழக்க ,அடுத்து கிறிஸ் கெயில்களமிறங்கினார். கே. எல். ராகுல் கிறிஸ் கெயில் பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டத்தை காட்டியது. ராகுல் அரை சதம் எடுத்து அசத்த, கெயில் இறுதிகட்டத்தில் சிக்சர் ,பவுண்டரி என அடித்து விளாசினார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடினர். இறுதி கட்டத்தில் பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 132 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியின் மூலம் பஞ்சாப் அணி தன்னுடைய 2வது வெற்றியை கைப்பற்றியது.