தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி மே 1ம் தேதி முதல் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி மினிமம் பேலன்ஸ் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைம், லிபர்டி சேவிங்க்ஸ் அக்கவுன்ட் வைத்திருப்பவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் 25 ஆயிரமாக உயர்வு. மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் ஒவ்வொரு 100 க்கும் ரூ.10 அபராதம் விதிக்கப்படும். மாத சராசரி ரூ.7,500 க்கு கீழ் இருந்தால் ரூ.800 வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். இந்த திடீர் அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.