இந்த உணவுகளை எல்லாம் மீண்டும் சூடு படுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் அபாயம் ஏற்படும்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் சிலர் என்று சமைத்த உணவுகள் மீதி ஆனால், அதனை மறுநாள் சூடு படுத்தி சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடுவது மிகவும் தவறு. எந்த உணவுகளையெல்லாம் சூடுபடுத்தி சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கீரை வகைகள், கேரட் மற்றும் முள்ளங்கி என நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சூடாக்கினால் அது விஷமாக மாறும். வேக வைத்த உணவை மீண்டும் சூடு படுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும். மேலும் முட்டை மற்றும் சிக்கன் போன்ற உணவுகளிலும் புரோட்டின் சத்து அதிகமாக இருப்பதால் சூடுபடுத்தி உண்ணும்போது அது விஷமாக மாறும். அதனால் இனிமேல் இவ்வாறான உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் உடலுக்கு நல்லது.