Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை தப்பிச்சிட்டாங்க..! ஓடி கொண்டிருந்த காரில் திடீர் பகீர்… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அஞ்சுகோட்டையில் ஷேக்ஆசிப்கான் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 21-ஆம் தேதி உறவினர்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து கார் தேவகோட்டை தாலுகா வெண்ணியூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்தது. இதனால் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கி விட்டனர்.

அப்போது கார் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் காரில் இருந்தவர்கள் புகை வந்தவுடன் காரை உடனடியாக நிறுத்தியதால் உயிர்தப்பினர். இதுகுறித்து திருவேகம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |