தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை 30 மணி நேரம் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கி போது அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மீறி யாராவது வெளியில் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊரடங்கு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.